/ செய்திகள் /  காங்., பின்னடைவு: களமிறங்கும் பணம்

 காங்., பின்னடைவு: களமிறங்கும் பணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டசபை தொகுதி வேட்பாளர்களாக, காங்., சிட்டிங் எம்.எல்.ஏ., கருமாணிக்கம், அ.தி.மு.க., - கீர்த்திகா, த.வெ.க., - ராஜீவ், நாம் தமிழர் - பிரேம்நாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அத்தொகுதியில் கரிய மாணிக்கம் அம்பலம், கே.ஆர்.ராமசாமி, தற்போது கருமாணிக்கம் என மூன்று தலைமுறைகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோரே எம்.எல்.ஏ.,வாகி வருகின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ., கருமாணிக்கம், ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராததாலும், மக்கள் பிரச்னைகள் குறித்து கண்டுகொள்ளாததாலும், மக்கள் மற்றும் கூட்டணி கட்சியான தி.மு.க., நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. அதனால், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகள், அருகில் உள்ள தொகுதிகளுக்கு சென்று அங்கு களப்பணி ஆற்றி வருகின்றனர். அதிருப்தியை சரிசெய்ய, தி.மு.க., கட்சி நிர்வாகிகள் 'கவனிக்கப்'பட்டனர். இந்நிலையில், த.வெ.க., வேட்பாளரின் வேகம் மற்றும் அ.தி.மு.க., வேட்பாளருக்கு தொகுதியில் இருக்கும் மக்கள் செல்வாக்கு காரணமாக, காங்., பின்னடைவை சந்தித்துள்ளதாக தலைமைக்கு ஆய்வு நிறுவனம் தகவல் அளித்துள்ளது. எனவே, முதற்கட்டமாக தபால் ஓட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். அதே அளவிற்கு பொது ஓட்டுகளுக்கும் தர, காங்., தரப்பு தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Arul Narayanan
ஏப் 20, 2026 19:27

தபால் ஓட்டு போடும் அரசு ஊழியர்கள் கூட ஓட்டுக்கு பணம் வாங்கும் இழிநிலையில் தமிழ் நாடு உள்ளது.


ஆகுயர்தான்
ஏப் 19, 2026 11:25

ஒடனே மாப்பிள்ளை அனுப்பி வைத்தனர். அவரும் நான்கு கவனித்தார். வெற்றி உறுதி


Palanisamy Sekar
ஏப் 19, 2026 02:45

ஸ்டாலினின் ஆட்சியின் லட்சணம் அடச்சீ என்றாகிவிட்டதால் தமிழகம்முழுக்க பணம் கொடுக்காமல் திமுகவோ அல்லது காங்கிரஸோ ஒரு சீட்டு கூட வெற்றி பெறவே முடியாது என்கிறது உளவுத்துறையின் அறிக்கை. அதனால் கலக்கம் அடைந்த ஸ்டாலின் எவ்வளவுதான் பணத்தை இறைப்பதோ என்கிற கவலையில் இருப்பதாக கூறுகின்றார்கள்.அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் திமுக கூட்டணியின் செல்வாக்கு அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. திமுகவோ காங் கட்சியோ இந்த முறை படுகேவலமாகவே தோற்றுப்போகும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை