ராகுல் பேச்சை தவறாக மொழி பெயர்த்த செல்வப்பெருந்தகை
சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடந்த பிரசாரத்தில் ராகுலின் பேச்சை, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, தவறாக மொழி பெயர்த்ததால் காங்., தொண்டர்கள் கடும் குழப்பமடைந்தனர்.
ராகுல், 'பா.ஜ.,வின் தொலைநோக்கு சிந்தனையை வீழ்த்துவோம்' என பேசியபோது, 'பா.ஜ., நாட்டை பிளவுபடுத்துவதாக' செல்வப்பெருந்தகை மொழிபெயர்ப்பு செய்தார்.
இதுபோல, 'பிரதமர் மோடி முகத்தில் நேற்று முற்றிலுமாக நம்பிக்கை இல்லை' என ராகுல் பேசியதை, 'பிரதமர் மோடி முழு நம்பிக்கையுடன் இருந்தார்' என மொழிபெயர்த்தார்.
'அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மோடி இருக்கிறார். நம் நாட்டையே விற்பனை செய்யும் வகையில், இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார்' என ராகுல் பேசியதை, 'நாம் எல்லோரும் ஒருங்கிணைந்த இந்தியாவாக இருக்கிறோம்.
இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர்,' என செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்தார்.
'நம் எரிசக்தி பாதுகாப்பை மோடி, தாரை வார்த்து விட்டார். நம்முடைய சிறு குறு தொழில்களையும் விற்று விட்டார். டிரம்ப் குதிக்கச் சொன்னால் குதிக்கும் நிலையில் மோடி இருக்கிறார்' என ராகுல் பேசியதை, 'நாம் வலிமையாக இருக்கிறோம்.
'எல்லா இருப்புகளையும் விற்று தீர்த்து விட்டனர். மோடி எகிறிக் கொண்டு இருக்கிறார்' என மொழி பெயர்த்தார்.
'தமிழர்களின் ஆன்மா தமிழ்-' என ராகுல் பேசியதை, 'தமிழின் ஆன்மா இந்த தேசம்' என தப்பாக மொழி பெயர்த்தார் செல்வப்பெருந்தகை.
இதுபோல, ராகுலின் பேச்சு முழுவதையுமே, தவறாக செல்வப்பெருந்தகை மொழிபெயர்ப்பு செய்ததால், காங்., தொண்டர்கள் கடும் குழப்பம் அடைந்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்