திருமுருகன்பூண்டி சிறக்கும்: பா.ஜ. முருகன் இலக்கு
அவிநாசி: அவிநாசி தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகன், திருமுருகன்பூண்டியில் பிரசாரம் செய்தார். நேற்று திருமுருகன்பூண்டி நகராட்சி, அணைப்புதுார், கோபால்டு மில் பஸ் ஸ்டாப், அம்மாபாளையம், ராக்கியாபாளையம், உமையஞ்செட்டிபாளையம் மற்றும் தேவராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார். முருகன் பேசியதாவது: எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆசி பெற்றதும், பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி ஆதரவு பெற்றதுமான தாமரைச் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க. கொடுமையான ஆட்சி நடத்தியது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கொடூர கொலைகள் நடந்துள்ளது. அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி ஆட்சி அமையும்போது, பூண்டிக்கு தனி பஸ் ஸ்டாண்ட் மற்றும் திருமுருகநாதசுவாமி கோவிலை பராமரித்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதி பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிச்சயம் செய்து, குறிப்பாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்து, வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்றப்படும். எனவே, தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி அடைய செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில், அ.தி.மு.க. வர்த்தக அணி மாநில துணை செயலாளர் அம்பாள் பழனிசாமி, புறநகர் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் லதா, நகர செயலாளர் பழனிசாமி, மாவட்ட நிர்வாகி ஆனந்தகுமார் மற்றும் பா.ஜ. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am