Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பொறியியல் கல்லுாரியை வரவிடாமல் தடுத்தது தி.மு.க.,தான்: பென்ஜமின்

 பொறியியல் கல்லுாரியை வரவிடாமல்  தடுத்தது தி.மு.க.,தான்: பென்ஜமின்

மதுரவாயல்: ''அ.தி.மு.க., ஆட்சியில் அடையாளம்பட்டு பகுதியில் கொண்டு வர இருந்த பொறியியல் கல்லுாரி, தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது,'' என, முன்னாள் அமைச்சர் பென்ஜமின் பேசினார்.

மதுரவாயல் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் பென்ஜமின், மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இவர் நேற்று, அடையாளம்பட்டு ஊராட்சியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:

அடையாளம்பட்டில் 7 ஏக்கர் நிலத்தில் பொறியியல் கல்லுாரி கட்ட, அ.தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது.

அடையாளம்பட்டில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.

குடியிருப்பு பகுதியில் அமைய இருந்த உயர்அழுத்த துணை மின் நிலையத்தை, திருவேற்காடில் கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள காலி இடத்தில், யாருக்கும் இடையூறு இல்லாமல் அமைக்கப்பட்டது.

ஆனால், தி.மு.க., ஆட்சியில் மக்கள் பணிகள் எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வந்த பல திட்டங்கள் முடக்கப்பட்டன. தமிழகத்தில், கஞ்சா விற்பனை செய்வதே தி.மு.க.,வினர் தான்.

இவ்வாறு அவர் பேசினர்.

Advertisement