பிரதமர் மோடியை திட்டுபவர்கள் இந்தியராக இருக்க முடியாது ராஜேந்திர பாலாஜி பேச்சு
ராஜபாளையம்:''பிரதமர் மோடியை திட்டுபவர்கள் இந்தியராக இருக்க முடியாது,'' என, ராஜபாளையத்தில் நடந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பிரிசில்லா அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அவர் மேலும் பேசியதாவது: ராஜேந்திர பாலாஜி பிரதமர் மோடியின் ஆள் என்கின்றனர். மோடியை திட்டுபவர்கள் இந்தியராக இருக்க முடியாது. இந்திய மக்கள் நிம்மதியாக இருப்பதற்கு இரும்பு மனிதர் மோடி பிரதமராக இருப்பது தான் காரணம். நமக்கு பிரச்னை வந்த காலத்தில் எல்லாம் கை கொடுத்தவர் மோடி. டில்லியில் மோடியும், தமிழகத்தில் பழனிசாமியும் இருந்தால் தான் நாடு வளரும். தங்கபாண்டியன் என பெயர் வைத்துக்கொண்ட எம்.எல்.ஏ., பித்தளையாக உள்ளார். ராஜபாளையத்திற்கு எந்த திட்டங்களையும் தி.மு.க., கொண்டு வரவில்லை. அரசு மருத்துவமனையை திறந்தார்கள். ஆனால் டாக்டர்கள் இல்லை. இவ்வாறு பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm