Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பிரதமர் மோடியை திட்டுபவர்கள் இந்தியராக இருக்க முடியாது ராஜேந்திர பாலாஜி பேச்சு

 பிரதமர் மோடியை திட்டுபவர்கள் இந்தியராக இருக்க முடியாது ராஜேந்திர பாலாஜி பேச்சு

ராஜபாளையம்:''பிரதமர் மோடியை திட்டுபவர்கள் இந்தியராக இருக்க முடியாது,'' என, ராஜபாளையத்தில் நடந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பிரிசில்லா அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது: ராஜேந்திர பாலாஜி பிரதமர் மோடியின் ஆள் என்கின்றனர். மோடியை திட்டுபவர்கள் இந்தியராக இருக்க முடியாது. இந்திய மக்கள் நிம்மதியாக இருப்பதற்கு இரும்பு மனிதர் மோடி பிரதமராக இருப்பது தான் காரணம். நமக்கு பிரச்னை வந்த காலத்தில் எல்லாம் கை கொடுத்தவர் மோடி. டில்லியில் மோடியும், தமிழகத்தில் பழனிசாமியும் இருந்தால் தான் நாடு வளரும்.

தங்கபாண்டியன் என பெயர் வைத்துக்கொண்ட எம்.எல்.ஏ., பித்தளையாக உள்ளார். ராஜபாளையத்திற்கு எந்த திட்டங்களையும் தி.மு.க., கொண்டு வரவில்லை. அரசு மருத்துவமனையை திறந்தார்கள். ஆனால் டாக்டர்கள் இல்லை. இவ்வாறு பேசினார்.

Advertisement