Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 புதுச்சேரியில் ராகுல் - ஸ்டாலின் சேர்ந்து பிரசாரம் செய்வரா?

 புதுச்சேரியில் ராகுல் - ஸ்டாலின் சேர்ந்து பிரசாரம் செய்வரா?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -

காங்கிரஸ் மேலிட தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், 'இண்டி' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, புதுச்சேரியில் 6ம் தேதி பிரசாரம் செய்கிறார். அன்றைய தினம், முதல்வர் ஸ்டாலினும் புதுச்சேரியில் இருப்பதால், இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுச்சேரி 'இண்டி' கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகள், தி.மு.க., 14 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தி.மு.க., தனக்கு ஒதுக்கிய தொகுதிகளில் ஒன்றை, வி.சி.க.,வுக்கு ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக வி.சி.க., அறிவித்து உள்ளது.

இந்நிலையில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகள் தவிர, தி.மு.க., போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.

வரும் 9ம் தேதி, அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது; 7ம் தேதி பிரசாரம் முடிவதால், 6ம் தேதி ராகுல் புதுச்சேரி வருகிறார். 'இண்டி' கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அதே நாளில், முதல்வர் ஸ்டாலினும், தட்டாஞ்சாவடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ராகுலும், ஸ்டாலினும் புதுச்சேரியில் இருப்பதால், இருவரும் ஒரே மேடையில் பேசுவரா என்ற எதிர்பார்ப்பு, இரு கட்சியினரிடமும் எழுந்துள்ளது.

Advertisement

ஏப் 03, 2026 01:01 pm

பேயும் , பூதமும் ஒன்றாக வந்தாலும் எதிர்த்து ஓட்டு போட வேண்டும்.

Reply Rate this
ஏப் 03, 2026 10:03 am

வாய்ப்பில்ல ராசா வாய்ப்பில்ல. கேரள தேர்தல் முடியும் வரை புதுச்சேரி, தமிழகத்திற்கு ராகுல் வர மாட்டார். வந்தால் கம்யூனிஸ்டுகளுக்கும் சேர்த்து வாக்கு கேட்க வேண்டி இருக்கும்.இது கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரசை பாதிக்கும். கேரள தேர்தல் முடிந்த பின்தான் தமிழக தேர்தலில் நடிக்க மேடை ஏறுவார் மிஸ்டர்.ராகுல்.

Reply Rate this
ஏப் 03, 2026 06:55 am

அகிலேஷ் உடன் சேர்ந்து அகிலேஷ் ன் சைக்கிள் ஆகிவிட்டது.

தேஜஸ்வியுடன் கூட்டு வைத்து HURRICANE LANTERN ன் மங்கிய வெளிச்சத்தையும் இருட்டாக்கிவிட்டார்

இப்போது ஸ்டாலின் கூட கூடி சூரியனை அஸ்தமனம் ஆகிவிடுவார்.

Reply Rate this
ஏப் 03, 2026 06:25 am

ஒருத்தருக்கே சர்க்கஸ் கூடாரம் போல என்றால் இதற்கு கேட்கவே வேண்டாம்...

Reply Rate this
ஏப் 03, 2026 05:05 am

இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்வது சரியாக இருக்கும். அரசியலில் அது யாராலும் செய்யப்படாததாகவும இருக்கும்.
காங்கிரசும், திமுகவும் ஒருசேர போட்டியிடும் அந்த ஆறு தொகுதிகளில் ஒரே மேடையில் இருவரும் இணைந்து தோன்றி ஸ்டாலின் திமுகவிற்கும், ராகுல் காங்கிரசிற்கும் வாக்கு கேட்பது சாதனையாக இருக்கும்.

Reply Rate this
ஏப் 03, 2026 04:27 am

விளங்காத கூட்டணி

Reply Rate this