பிரசாரத்தில் சீமான் முதலிடம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில் பிரசாரம் செய்த தலைவர்கள் பட்டியலில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலிடம் பிடித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல், நாளை நடக்க உள்ளது. இந்த தேர்தலில், திமுக - அதிமுக கூட்டணிகள், தவெக - நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பை மார்ச் 15ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டது. மார்ச் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது.இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நாட்களில் அதிக இடங்களில் பிரசாரம் செய்த தலைவர்கள் பட்டியலில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 178 இடங்களில் பேசியுள்ளார்.சீமானைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 123 இடங்களில் பிரசாரம் செய்தார். முதல்வர் ஸ்டாலின் 80 இடங்களிலும், தவெக தலைவர் நடிகர் விஜய் 14 இடங்களிலும் பிரசாரம் செய்து, இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.தலைவர்கள் பெயர் - பிரசாரத்தில் பேசிய இடங்கள்சீமான் - 178பழனிசாமி - 123ஸ்டாலின் - 80விஜய் - 14
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மிகக்குறைவான தொகுதிகளில் அதுவும் பத்துக்கு ஏழு தன் சொந்த மொழி பேசும் சமூகத்தவருக்கே கொடுத்து அலட்டிக்கொள்ளாமல் வைரத்தோடு ஜொலிக்க பிரச்சாரம் செய்த எங்கள் பிரேம் அண்ணி சுலபமாக பத்து தொகுதிகளிலும் ஜெயிச்சு பணிக்கர் சொன்னபடி வைர செருப்பணிந்து அமைச்சர் ஆகப்போகிறார்
பகல் கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு.
தேர்தல் பிரச்சாரத்தில் முதலிடத்தில் இருக்கும் சீமான் ஓட்டு எண்ணிக்கையின் போது கடைசியிடம்தான் பிடிப்பார். இந்த தேர்தலோடு சைமன் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.
நல்லவர்களின் வாக்கு சீமானுக்கு உண்டு காசு கொடுக்காமல் நேர்மையாக விழும் ஒட்டு
அதிகமா பேசுனா என்ன குறைவா பேசினா என்ன.. இப்போது தமிழன் ஏதோ ஒரு போதையில் சுற்றி திரிகிறான்.. சீமான் கூட்டத்துக்கு வந்தவர்கள் சீமானின் பேச்சை கேட்க வந்தார்கள்.. விஜயின் முகத்தை பார்க்கவே கூடியது விஜய்க்கான கூட்டம். ஆக பிரச்சாரம் எந்த பலனையும் யாருக்கும் கொடுக்க போவதும் இல்லை.. முகம் காட்டியே ஆட்சியை பிடிக்கலாம் என்ற கனவும் பலிக்க போவதும் இல்லை..
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am