உதயநிதி முதல்வராக முடியாது: பீயூஷ் கோயல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ''உதயநிதி முதல்வராக முடியாது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்,'' என, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி மனதள்வில் தொண்டராகவே இருக்கிறார். அவர், மக்களின் இதயங்களை வெல்வது எப்படி, சமூகத்தின் பல்வேறு தரப்பினரை சென்றவடைவது எப்படி, தமிழக மக்களுக்கு சேவை செய்வது எப்படி என்பது குறித்து, என்னைப் போன்ற பா.ஜ.,வின் லட்சோப லட்சம் தொண்டர்களுக்கும் வழிகாட்டுகிறார். ஊழல் நிறைந்த தி.மு.க, அரசு, இந்த தேர்தலில் தோற்கடிக்கப்படும். உதயநிதி, தமிழக முதல்வராக முடியாது. தமிழுக்கு எதிரானவர்; மக்களுக்கு எதிரானவர், பெண்களுக்கு எதிரானவர். அதனால் அவர், முதல்வராக முடியாது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், மக்களுக்கு நல்ல நிர்வாகம் வழங்கப்படும். மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றி, மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு வழங்கப்படும். விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர். காங்கிரஸ் - தி.மு.க., தோல்விக்கான கூட்டணி. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இபிஎஸ் மற்றும் அண்ணாமலை முதல்வராக முடியும் என்றால் உதயநிதி ஏன் ஆக முடியாது?
உதயநிதி முதல்வர் ஆனால் உமக்கு என்ன பிரச்சினை உமது கட்சியை வளர்க்க பாருங்க இல்லை என்றால் ஏதாவது ஒரு கட்சி முதுகில் தான் சவாரி செய்ய வேண்டும்
தி.மு.க., வெற்றி பெற்றால் ஜாதி ஓட்டுக்களை வாங்கித்தந்த பன்னீர்தான் துணை முதல்வர்.
இவர் சொல்வது முற்றிலும் உண்மை. திமுக வெற்றி பெற்றால் ஸ்டாலின் முதல்வர். உதயநிதி மறுபடியும் துணை முதல்வர்தான் ஆக முடியும்.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am