/ செய்திகள் /  வாக்குறுதிகளை விளக்கி நா.த.க., வேட்பாளர் பிரசாரம்

 வாக்குறுதிகளை விளக்கி நா.த.க., வேட்பாளர் பிரசாரம்

சூலூர்: தான் வெற்றி பெற்றால், நிறைவேற்றும் வாக்குறுதிகளை மக்களிடம் நிதானமாக விளக்கி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன் பிரசாரம் செய்தார். சூலுார் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், ராஜசேகரன் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு பிரசார களத்துக்கு சென்று விட்டார். ஒவ்வொரு ஊரிலும் தெரு முனை பிரசாரம் செய்துவிட்டு, வீடு வீடாக மக்களை சந்தித்து, நோட்டீஸ்களை கொடுத்து பிரசாரம் செய்கிறார். பிரசாரத்தில் பேசுகையில், ''சூலூர் தொகுதி விவசாயம் மிகுந்த பகுதி. ஆனால், தேவையான தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதற்கு தீர்வாக, ஆனைமலையாறு ---- நல்லாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். சூலுார் தொகுதியில் உள்ள குளம், குட்டைகளை துார் வாருவேன். நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன். தென்னை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மதிப்பு கூட்டும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பேன். சுல்தான்பேட்டை பகுதியில், அரசு கல்லுாரி கொண்டு வர முயற்சி செய்வேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !