Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்!  தி.மு.க., வேட்பாளர் ஜெயக்குமார் உறுதி

 ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்!  தி.மு.க., வேட்பாளர் ஜெயக்குமார் உறுதி

உடுமலை: உடுமலை தொகுதி அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடையும் வகையில், புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும், என, தி.மு.க.,வேட்பாளர் ஜெயக்குமார் பேசினார்.

உடுமலை தொகுதி தி.மு.க.,வேட்பாளர் ஜெயக்குமார், உடுமலை நகரம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் பேசியதாவது:

திராவிட மாடல் ஆட்சியில், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், விடியல் பயணம் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியதால், மீண்டும் தி.மு.க.,ஆட்சி தொடர, அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.

தி.மு.க., ஆட்சி அமைத்ததும், இத்தொகைகள் அதிகரிக்கப்படுவதோடு, மகளிருக்கு தேவையான 'டிவி' பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என, வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொள்ள, 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

உடுமலை தொகுதி அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைய, புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். பி.ஏ.பி., திட்டத்தில் நிலுவையிலுள்ள ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாசன திட்டத்தில் கடைமடை பகுதிக்கு நீர் சென்றடைவதில்லை, கால்வாய்களை துார்வார வேண்டும், என விவசாயிகள் தரப்பில், உடுமலை வந்த முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.

உரிய நிதி ஒதுக்கப்படும் என அப்போது உறுதியளித்த முதல்வர், உடனடியாக ரூ. 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்ததால், கால்வாய் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

உடுமலைக்கான திட்டங்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றுவேன். தேர்தல் வரும் போது மட்டும் மக்களை தேடி வருபவராக இல்லாமல், மக்களோடு இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்.

திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு குடிமங்கலம் ஒன்றியத்திற்கு செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்திலுள்ள குளறுபடிகள் சரி செய்து, தேவையான குடிநீர் வினியோகிக்கவும், கூடுதல் நீர் கிடைக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு, பேசினார்.

Advertisement