சென்னையில் விஜய் ரோடு ஷோ பாதியில் ரத்து
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில் தவெக தலைவர் விஜயின் ரோடுஷோ பாதியில் ரத்து செய்யப்பட்டது. திநகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் ஓட்டு சேகரித்த அவர், புரசைவாக்கம் பகுதியில் ரோடுஷோவை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார்.தமிழக அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பெரம்பூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை துவங்கினார்.அவர் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் பகுதியிலும் பிரசாரம் செய்தார். அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார்.
ரத்து
வேப்பேரி தொகுதியில் விஜய் ரோடு ஷோ பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. திநகர், ஆயிரம் விளக்கு பகுதியை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். வேப்பேரி பகுதியில் திரண்டிருந்தவர்களை கிளம்பி செல்லும்படி மாவட்ட செயலர் அறிவித்தார்.நேரலை
சென்னையில் விஜய் பிரசாரம் செய்தது தினமலர் சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am