Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


சென்னையில் விஜய் ரோடு ஷோ பாதியில் ரத்து

சென்னையில் விஜய் ரோடு ஷோ பாதியில் ரத்து
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சென்னையில் தவெக தலைவர் விஜயின் ரோடுஷோ பாதியில் ரத்து செய்யப்பட்டது. திநகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் ஓட்டு சேகரித்த அவர், புரசைவாக்கம் பகுதியில் ரோடுஷோவை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார்.

தமிழக அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பெரம்பூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை துவங்கினார்.அவர் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் பகுதியிலும் பிரசாரம் செய்தார். அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார்.

பின்னர் பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுத்தும் காரைக்குடியில் அனுமதி கொடுத்த நேரத்தை தாண்டியதால் விஜயால் பேச முடியவில்லை. அவர் வெளிமாவட்டங்களில் பிரசாரத்தை முடித்த நிலையில், தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

அதன்படி, சென்னை தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணியில் இன்று (ஏப்ரல் 15) தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர். முதலில் திநகரில், தவெக வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். வேனில் நின்ற படி வந்த அவர், சாலையின் இரு புறமும் நின்ற மக்களை நோக்கி கை அசைத்தபடியே சென்றார். விஜயை பார்க்க தடுப்புகளை தாண்டி இளைஞர்கள் வர முயன்றனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
திநகரில் விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்திற்கு வந்த விஜய் வாகனம் ஓரிரு வினாடிகள் அங்கு நின்றுவிட்டு கிளம்பி சென்றது. விஜய் எதுவும் பேசவில்லை. இதனால் காத்திருந்த அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். பிறகு ஆயிரம் விளக்கு பகுதியிலும் பிரசாரம் செய்தார்.

ரத்து

வேப்பேரி தொகுதியில் விஜய் ரோடு ஷோ பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. திநகர், ஆயிரம் விளக்கு பகுதியை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். வேப்பேரி பகுதியில் திரண்டிருந்தவர்களை கிளம்பி செல்லும்படி மாவட்ட செயலர் அறிவித்தார்.

நேரலை

சென்னையில் விஜய் பிரசாரம் செய்தது தினமலர் சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Advertisement