விஜய்க்கு பாதுகாப்பு இல்லை: அமித்ஷாவுக்கு தவெக புகார் கடிதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தேர்தல் பிரசாரத்தில் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. வில்லிவாக்கத்தில் நடந்த தவெக கூட்டத்தில், கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருக்கும்போது, பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில், உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டன. அயனாவரத்தைச் சேர்ந்த கலைவாணி, 45, என்பவரின் தொடையில் காயம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தோர் அலறியடித்து ஓடினர்.
மனு
தவெக பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்க கோரி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளராகப் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா புகார் மனு அளித்துள்ளார். மனுவில், ''முதல்வர் ஸ்டாலினின் நேரடித் தூண்டுதலின் பேரிலும், சென்னை போலீஸ் கமிஷனரின் உதவியுடனும், திமுகவைச் சார்ந்த சமூக விரோத சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடக்கிறது.சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தேர்தலில் நீதி மற்றும் நியாயமான நடைமுறைகளை நிலைநாட்ட வேண்டும் என ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am