Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜய்க்கு பாதுகாப்பு இல்லை: அமித்ஷாவுக்கு தவெக புகார் கடிதம்

விஜய்க்கு பாதுகாப்பு இல்லை: அமித்ஷாவுக்கு தவெக புகார் கடிதம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தேர்தல் பிரசாரத்தில் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
வில்லிவாக்கத்தில் நடந்த தவெக கூட்டத்தில், கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருக்கும்போது, பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில், உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டன. அயனாவரத்தைச் சேர்ந்த கலைவாணி, 45, என்பவரின் தொடையில் காயம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தோர் அலறியடித்து ஓடினர்.

கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அப்பு மற்றும் ரித்விக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் தவெக நிகழ்ச்சிகளுக்கு தமிழக போலீசார் போதிய பாதுகாப்பு வழங்குவதில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ''தமிழகத்தில் தவெக கட்சி போலீசார் அனுமதி பெற்று பிரசாரம் நடத்தினாலும் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் பிரசாரத்தின் போது பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது. ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள ஒருவருக்கு கட்டாயமாக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தாதது கவலை அளிக்கிறது'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தவறான பெயரில் கடிதம்
நிர்மல் குமார், தன் புகார் கடிதத்தை உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கும் அனுப்பியுள்ளார். அஜய் பல்லா, ஒன்றரை ஆண்டுக்கு முன் கவர்னராக நியமிக்கப்பட்டு விட்டார். யார் உள்துறை செயலாளர் என்று தெரியாமல் நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளதாக, இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மனு

தவெக பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்க கோரி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளராகப் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா புகார் மனு அளித்துள்ளார். மனுவில், ''முதல்வர் ஸ்டாலினின் நேரடித் தூண்டுதலின் பேரிலும், சென்னை போலீஸ் கமிஷனரின் உதவியுடனும், திமுகவைச் சார்ந்த சமூக விரோத சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடக்கிறது.
சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தேர்தலில் நீதி மற்றும் நியாயமான நடைமுறைகளை நிலைநாட்ட வேண்டும் என ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

Advertisement

ஏப் 02, 2026 12:38 am

விஜய் சேரும்கூட்டத்தினரை அவர்களாகவே ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கவேண்டும் .
கூட்டத்திற்கென்று தடுப்புகளை திட்டமிட்டு அமைத்து கூட்டங்கள் நடத்திடவேண்டும் .நாம் தமிழர் கூட்டத்தை பார்த்து கற்றுக்கொண்டிருக்கவேண்டும்.

Reply Rate this
ஏப் 01, 2026 07:16 pm

MGR தனக்கு வேண்டிய காவல் படையை தானே சம்பளம் கொடுத்து வைத்து கொண்டார் அரசை எதிர் பார்க்க வில்லை. உங்களுக்கெல்லாம் பந்தா தான் பெரிசு மக்கள் நலன் அல்ல. அரசியல் அ நா ஆ வனா தெரியாதவன் எல்லாம் பதவி பித்து பிடித்து அலையும் காலமிது. உண்மையான அரசியல் MGR ரோடு முடிந்து விட்டது.

Reply Rate this
ஏப் 01, 2026 06:21 pm

சில சமயங்களில் பாஜக, திமுகவின் பி அணி என்று எனக்குத் தோன்றுகிறது. பாருங்கள், இன்று துரைமுருகன் ஊழல் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Reply Rate this

ஆட்சிக்கு வருவதற்கு அதாவது, மக்களை கொள்ளைகள் அடிக்க திமுகவின் குண்டர்கள் எந்த எல்லைக்கும் போக கூடியவர்கள். விஜய் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

Reply Rate this
M.Selvam - Chennai/India
மற்ற கச்சி குண்டர்கள் பற்றி சொல்லாமல் விடுவது மாண்பு கிடையாது.. அவர்கள் மட்டும் இளிச்சவாயர்களா என்ன ????
ஏப் 01, 2026 09:43 pm
Rate this
ஏப் 01, 2026 04:45 pm

தமிழக வெற்றிக்கழக பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு கொடுக்கமுடியவில்லை என்றால் தேர்தலை 6 மாதத்திற்கு ஒத்திவைத்து ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நிர்வாகத்தை கொண்டுவந்து அதற்கப்பிறகுதேர்தலை நடத்துவதுதான் ஜனநாயகத்தின் சட்ட நடைமுறையாகும் .ஒரு கட்சியை பிரச்சாரம் செய்யவிடாமல் தேர்தலை நடத்துவது சரியான ஜனநாயக நடைமுறையாகாது .

Reply Rate this
You are correct.
ஏப் 01, 2026 07:04 pm
Rate this
ஏப் 01, 2026 04:33 pm

முதலில் வேட்பு மனு ஏற்கப் படுகிறதா என்று பார்க்க வேண்டும்

Reply Rate this
ஏப் 01, 2026 04:30 pm

இந்நாட்டின் பிரதமரே ரோட் ஷோ என்று நாடு முழுக்க ஓய்வெடுக்காமல் செல்லுகிறார். அவரை விட அதிக பாதுகாப்பு விஜய் கேட்கிறார்

Reply Rate this
ஏப் 01, 2026 04:24 pm

எந்த லெவலுக்கும் போக ரெடி. அறிவிலி விசை முதலில் இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டும்.

Reply Rate this
ஏப் 01, 2026 03:41 pm

பாதுகாப்பு கருதி வார்டு நிர்வாகிகளை வீட்டிற்கு வரவழைத்து பிரச்சாரம் செய்கிறார்

Reply Rate this
ஏப் 01, 2026 03:40 pm

பாதுகாப்பா பனையூரிலேயே இருந்தால் தமிழன் நிம்மதியா இருப்பான் …

Reply Rate this