சீமான் தொகுதியில் விஜய் இன்று பிரசாரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடும் த.வெ.க., வேட்பாளரை ஆதரித்து, த.வெ.க., தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி உள்ளிட்ட தொகுதிகளில், த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடைபெறும் கூட்டத்தில், விஜய் இன்று பிரசாரம் செய்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை சென்று, அங்கிருந்து சாலை வழியே காரைக்குடிக்கு விஜய் செல்கிறார்.
த.வெ.க., மீது 12 வழக்குகள்
இதற்கிடையே, துாத்துக்குடியில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில், தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக, 12 வழக்குகள் பதியப்பட்டன. திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடியில், நேற்று முன்தினம் விஜய் பிரசாரம் செய்தார். அவர், 'ரோடு ஷோ' நடத்தியபோது, அவர் வாகனத்தை பின்தொடர்ந்து பைக்கில் சென்றவர்களால், ஐந்து இடங்களில் விபத்து ஏற்பட்டு, 15 பேர் காயம் அடைந்தனர். இதேபோல, விஜய் பிரசாரத்தின்போது, தேர்தல் அதிகாரி விதித்த நிபந்தனைகளை மீறியதாக புகார் எழுந்தது. பொது இடங்களில் கட்சிக்கொடியை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து, அளித்த புகாரில் 12 வழக்குகள் பதியப்பட்டன.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am