காங்கிரஸ் எங்கிருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை
நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த, மத்திய பா.ஜ., அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அதில் இடம்பெற்ற தி.மு.க.,வின் முன்னாள் மத்திய அமைச்சர்கள், தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
தமிழகத்தில் காங்., எங்கே இருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருப்பதாக, அவர்கள் தான் கூறிக் கொள்கின்றனர். காங்., தன்னுடன் இருப்பதாக விஜய் பேசியது குறித்து, அவரிடம் தான் கேட்க வேண்டும்.
சட்டம்- - -ஒழுங்கை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. பிரதமர் குறித்து அவதுாறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், முதல்வரை விமர்சிப்பவர்களை கைது செய்கின்றனர். கன்னியாகுமரி கலெக்டர், சாத்துார் டி.எஸ்.பி., உள்ளிட்டோர் தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
-- நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்