விஜய் காண்பது பிரமாண்ட கனவு
த.வெ.க., தலைவர் விஜயின் அரசியல், சுயநல அரசியலாக செல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தலுக்கு முன், எந்த அடையாளத்தையும் காட்ட மாட்டேன் என்றிருந்த விஜய், இப்போது சில அடையாளங்களை காட்டுகிறார். அவர் நேரடியாக சாமி கும்பிடுகிறார்; அதை நான் பாராட்டுகிறேன்.ஆனால், 200 தொகுதிகளில், த.வெ.க.,வின் விசில் சத்தம் கேட்கும் என்பதெல்லாம், 'ஓவரான' சத்தம். விசிலுக்கான சத்தத்தை தாண்டி, அவர்களால் சத்தம் போட முடியாது. விஜய் காண்பது பிரமாண்டமான கனவு. மே 4 வரை அவர்கள் என்ன வேண்டுமானாலும் கனவு காணலாம். தற்போது விஜய் ஆன்மிக தேடலுக்கு செல்கிறார். சட்டசபை தேர்தல் 'ரிசல்ட்' வந்த பின், அவர் திரைப்பட 'ஷூட்டிங்' நடத்த இடம் தேடி செல்வார். - தமிழிசை, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தி மு க தீய சக்தி என மேடைமக்கு மேடை முழைங்கியவ்ர். இவ்வளவு வெறுப்பு எதனால் விழுங்க வில்லை. விளக்கமும் இல்லை. 41 பேர் கரூர் மரணம் , 15 கோடி வரியேப்பு,மனைவி சங்கீத வின், பையன், மகளின் புலம்பல்கள், நடிகையுட கண்ணேக்ஷன், லாட்டரி .மாபியா தொடர்ப்புகள், புஸ்ஸ்ய் பொண்ட தமிழ் அறிஞ்ர்களின் வழி காட்டுதல். விஜயை பாதாளம் கொண்டு சேர்த்து விடும். சிமானின் காத்தலுக்கு முடிவு வந்தது தமிழரின் பாக்கியம். விஜயின் அரசியல் , இன்னும் நல்லவீர்கள் புதியவர் வரவேண்டும் .varuvaatkal.
விஜய் எப்போதும் போல் அமைதியாகவே இருக்கிறார் ...ஆனால் அவரை பற்றியே அனைவரும் பேசுகிறார்கள் ..விஜய் ஒரு அதிசயமே ..அவர் அவருண்டு அவர் வேலையுண்டு என்று இருக்கிறார் ... . From the public perspective, Vijay is gentlemen..
பொறாமையில் பொங்கி எழுகிறார்கள் .. விஜய் வெற்றி பெறுவது மக்கள் கையில் .. எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எல்லா துறைகளும் உள்ள இலக்கு. முதலில் இவர் நான் வெற்றி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும் ...
ஏன் இப்படி விஜயின் மேல் இந்த நையாண்டி அடக்குமுறை தனி வாழ்க்கை விமர்சனம் எல்லா கட்சிகளும் கடை பிடிக்கின்றன. அவர் அரசியல் செய்ய உரிமை இல்லையா. ஏல்லோருமே ஆரம்பிக்கும் பொது தற்குறிதான், அவர் வெற்றியா தோல்வியா மக்கள் தீர்மானிப்பார்கள். ஒரு ஆரோக்கியமான அரசியல் தமிழகத்தில் மலருமா.
விஜய் ஆரோக்கியமான அரசியல் தருவார் என்று எப்படி நம்புவது? அரசியல் செய்து முதல்வர் ஆக எல்லாருக்கும் உரிமை உள்ளது உங்களுக்கும் எனக்கும் தான் ஆனால் தகுதி உள்ளதா ? என்றுதான் பார்க்க வேண்டும் கண்மூடித்தனமான நம்பிக்கை தற்குறித்தனமே
ஆரோக்கியமான அரசியல் என்பது இக்காலத்தில் கானல் நீர். எல்லோருமே குறுக்கு வழியில் சம்பாத்திக்கவே அரசியலுக்கு வருகிறார்கள். வரி ஏய்ப்பு செய்தவன் நாட்டை கொள்ளையடிக்கவே முயல்வான்.
மலரும் என்று சொல்வது
மே 4ல் விசய்க்கு சங்கு
யாரையும் சாதாரணமாக எடை போடக்கூடாது. ரிசல்ட் வரட்டும் அதுவரை அமைதி காத்தால் நமது கௌரவம் நமக்குள்ளே இருக்கும்.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am