/ செய்திகள் / ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணியாற்றவில்லை: திருமா கண்டுபிடிப்பு

ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணியாற்றவில்லை: திருமா கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணி ஆற்றவில்லை'' என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக பேசியுள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: விசிக சார்பில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பணி குழு நியமனம் செய்யப்பட்டது. ஒரு சில தொகுதிகளை தவிர ஆங்காங்கே கட்சியினர் தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து, சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். தேர்தல் பணி ஆற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து கட்சியினர் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்று தகவல் வந்துள்ளன. இது குறித்து தவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.களப்பணி ஆற்றிய கட்சியினருக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டசபை தேர்தல் என்கிற போது, ஒவ்வொரு தேர்தலிலும் பலர் பொது தொகுதிகளில் இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும், அப்படி தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலை வரும் போது, ஏமாற்றம் அடைவதும் ஒரு தொடர்கதையாக இருக்கிறது. குறைவான தொகுதிகளை நாம் பெறும்போது வேட்பாளர்களை மாற்றும் நிலை உருவாகிறது.புதிய புதிய ஆட்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற நிலைப்பாட்டை புறம் தள்ள முடியாது. அந்த கோரிக்கை வலுவாக எழுகிறது. 2001ல் தேடி, தேடி ஆட்களை பிடித்து போட்டேன். 2006ல் கூட மிக குறைவான வேட்பாளர்கள் தான் போட்டி போட்டார்கள். 2011ல் அதிகரித்தது, 2016ல் இன்னும் அதிகரித்தது. 2021 ஒரு தொகுதிக்கு 10 பேர் என்று போட்டி அதிகரித்தது. புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது.புதியவர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்பதற்காக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சீட் வழங்க இயலாமல் போனது. அதற்கு வெவ்வேறு காரணங்களை பலரும் சமூக ஊடகங்களில் எடுத்து சொன்னார்கள்; விவாதித்தார்கள். அந்த காரணங்கள் ஏதும் உண்மை அல்ல. திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறோம்.நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த போதும் யாருடனும் விவாதிக்கவில்லை. தேர்தலில் போட்டி எனும் எனது அறிவிப்பைத் தொடர்ந்து விசிக முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

விஜய் மீது திருமா பாய்ச்சல்!

மேலும் வீடியோவில் திருமாவளவன் கூறியதாவது: திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளையும் பின்னுக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கான வலிமையை அவர் (விஜய்) பெற்றிருக்கவில்லை. அதற்கான வாய்ப்பே இல்லை. எப்படி கணக்குப் போட்டு பார்த்தாலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Rajasekar Jayaraman
மே 03, 2026 12:36

திருமாவின் அத்தியாயம் ஜோசப் விஜய்யோடு முடிவடைந்தது.


dandanakka
மே 03, 2026 08:06

Election ரிசல்ட் வந்துடுசா ? இல்ல நாளைக்கு என்ன பேச வேண்டும் என்ற ஒத்திகையா?


பேசும் தமிழன்
மே 02, 2026 18:34

ஒருசில தொகுதியில் அல்ல..... அனை‌த்து தொகுதியிலுமே யாரும் தேர்தல் பணியாற்றவில்லை..... நீ மட்டும் பெட்டி வாங்கி கொண்டு.... பிளாஸ்டிக் சேர் கிடைத்தால் போதும் என்று.... ஒரு சமூக மக்களை அடமானம் வைக்க நினைத்தால்... அவர்கள் எப்படி வேலை செய்வார்கள் ?


RAJ
மே 02, 2026 18:01

அடுத்தவன் உழைக்கணுமா??


VIDYASAGAR SHENOY
மே 02, 2026 17:01

எந்த தொகுதியில் பணியாற்றினார்கள் என்ற கணக்கு சொல்லவும்


Chandru
மே 02, 2026 16:19

இந்த தேர்தலோட எல்லாம் காலி


Kumar Kumzi
மே 02, 2026 14:44

ஐயோ பாவம் ஒத்த பிளாஸ்டிக்கும் ஷேர்க்கும் ஆபத்தா சோனமுத்தா ஹீஹீஹீ


Ganesun Iyer
மே 02, 2026 14:35

விஷயம் என்னன்னா உள்ளார உடல..


raja
மே 02, 2026 13:45

அமைச்சர் பதவி தர முடியாதுன்னு சொல்லி கூட்டணி என்று வெளியில் கூறியவர்கள் எல்லாம் அந்த திருட்டு கட்சிக்கு ஆப்ப செருகிட்டாங்கோ...அது புரியாம இருபத்தி மூணாம் புலிகேசி கருத்து கணிப்பு என்று ஒரு திணிப்பை புரளி கிளப்பி விட்டு பின் தோற்றவுடன் மத்திய அரசின் சதி ஓட்டு பெட்டியில் கோல்மால் பண்ணி விட்டார்கள் என்று ஒப்பாரி வைக்கிறார் பாருங்க....


Kumar Kumzi
மே 02, 2026 13:41

ஹாஹாஹா துண்டுசீட்டு ராசிப்பா