ஓட்டு எண்ணிக்கையில் விழிப்புடன் செயல்படணும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை : 'ஓட்டு எண்ணிக்கையின் போது, பா.ம.க., மற்றும் தே.ஜ., கூட்டணி கட்சிகளின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது. தேர்தல் பிரசாரம், ஓட்டுப்பதிவு ஆகிய இரு கட்டங்களை விட, ஓட்டு எண்ணிக்கை என்ற மூன்றாம் கட்டம் தான் மிகவும் முக்கியம். இந்த தேர்தலில் வெற்றி நமக்கு தான் என்பதை, தேர்தல் பிரசாரத்தின்போதே நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. ஓட்டுப்பதிவு நாளன்றும், ஆட்சியாளர்களுக்கு எதிராக கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.
பா.ம.க., அடையப்போகும் வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது, ஓட்டு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ முடிவுகள் தான். எனவே, ஓட்டு எண்ணிக்கை அன்று, பா.ம.க., மற்றும் தே.ஜ., கூட்டணி கட்சிகளின் முகவர்கள், இன்னும் அதிக விழிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்