திருக்கோவிலுாருக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்க தாலுகா அலுவலகத்தில் வைப்பு
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் திருக்கோவிலுார் தாலுகா அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. திருக்கோவிலுார் சட்டசபை தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று விழுப்புரத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. திருக்கோவிலுார் தொகுதி தேர்தல் அலுவலர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், உதவி தேர்தல் அலுவலர், தாசில்தார் சரவணன் முன்னிலையில் வருவாய் துறையினர் பாதுகாப்பாக இறக்கி வைத்தனர். திருக்கோவிலுார் தொகுதியில் மொத்தம் 330 பூத்துகள் உள்ளது. இதற்காக கண்ட்ரோல் யூனிட் 396, பேலட் யூனிட் 396, டிவி பேட் 429 கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு அறையில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am