Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு கலை போட்டிகள்  

 கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு கலை போட்டிகள்  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு கலை போட்டிகள் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என கலைப்போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட சமூக நல அலுவலகம் சாற்பில் மிஸ் பர்ஸ்ட் வோட்டர் போட்டி, தேர்தல் விழிப்புணர்வு மவுன மொழி நாடகம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் வரும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போட்டிளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் அனைவரும்

தவறாமல் ஓட்டளித்து ஜனநாயக கடமைமை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த்

கேட்டுக்கொண்டார்.

Advertisement