சிரித்துக் கொண்டே அழுகிறோம்: தி.மு.க., அணியில் ம.தி.மு.க., விரக்தி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், 'சிரித்துக் கொண்டே அழுவதாக' ம.தி.மு.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த சட்டசபை தேர்தலை விட, ஒரு தொகுதியை குறைத்து தலா ஐந்து தொகுதிகள் தரப்பட்டுள்ளன.
தனியரசு வெளியேறுகிறாரா?
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகி, தி.மு.க., கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இணைந்தார். அவருக்கு தி.மு.க., தலைமை, ஒரு தொகுதியை உறுதி செய்ததாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள சங்ககிரி அல்லது பரமத்திவேலுார் தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரை, நேற்று முன்தினம் தனியரசு சந்தித்தபோது, 'முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு தொகுதி ஒதுக்க உத்தரவு தரவில்லை' என கூறப்பட்டதால், அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் தொடருவதா என்பது குறித்து, இன்று தன் முடிவை அறிவிக்க உள்ளார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am