உழைப்பை கொடுத்து விட்டோம்; தொடர்ந்து அரசியல் செய்வோம்: கட்சியினருக்கு சீமான் அறிவுரை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'சட்டசபை தேர்தலில், உழைப்பை கொடுத்து விட்டோம். முடிவுகள் எதுவானாலும், தொடர்ந்து அரசியல் களத்தில் நிற்போம்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில், நா.த.க., தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஆதரித்து, தமிழகம் முழுதும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அவர், 180க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் செய்துள்ளார். கடந்த தேர்தலில், 8.22 சதவீதம் ஓட்டுகளை பெற்ற நா.த.க.,விற்கு, விஜயின் த.வெ.க., வருகையால், இந்த தேர்தலில் ஓட்டு குறையும் என, கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. எனினும், 'தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், தொடர்ந்து தேர்தல் பயணத்தில் தான் இ ருப்போம்; இன்னும் வீரியமாக செயல்படுவோம்' என, கட்சியினரை சீமான் ஊக்கப்படுத்தி உள்ளார். இது குறித்து, நா.த.க.,வினர் கூறியதாவது: பெரிய நடிகர் என்ற பிம்பத்துடன் அரசியலுக்கு விஜய் வந்துள்ளார். இதுவரை அவரது அரசியல் செயல்பாடு பெரிதாக இல்லை. ஆனால், தேர்தலுக்கு பின், அவரது செயல்பாடுகளை பொறுத்து, அக்கட்சியின் வளர்ச்சி இருக்கும். அதே நேரம், நா.த.க.,வின் ஓட்டு சதவீதம் மற்றும் வெற்றி வாய்ப்பு எப்படி இருந்தாலும், அதை ஏற்று, தொடர்ந்து அரசியல் களத்தில் பயணிப்போம் என, சீமான் கூறியுள்ளார். அடுத்த ஐந்தாண்டுகளில், முன்பை விட வீரியமாக, நா.த.க., செயல்பாடுகள் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am