பிரிவினையை தூண்டும் பணியை செய்யும் பா.ஜ.,
சமீபத்தில் தொகுதி மறுவரையறை என்ற பெயரில், மக்களை பிளவுபடுத்த முயற்சி செய்த திட்டம் முறியடிக்கப்பட்டது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், இதை எதிர்த்தனர். பார்லிமென்டில் தமிழகத்தின் முக்கியத்துவத்தை குறைக்கவே, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 'இண்டி' கூட்டணி கட்சியினரால் தான், இந்த நிகழ்வு நடந்தது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ராஜிவ் நினைவுகள், காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்க்கும். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, மீண்டும் 'இண்டி' கூட்டணிக்கே தமிழக மக்கள் ஓட்டளிப்பர். ஜாதி, மதத்தை வைத்தே மக்களிடம் பிரிவினையை துாண்டும் பணியை பா.ஜ., செய்து வருகிறது.
--வேணுகோபால்,
பொதுச்செயலர், காங்கிரஸ்
Advertisement

வாசகர்கள் கருத்துகள்