/ செய்திகள் / ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்போம்: திருமாவளவன்

ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்போம்: திருமாவளவன்

பெரம்பலுார்: ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்போம் என்று திருமாவளவன் கூறி உள்ளார்.அரியலுார் மாவட்டம், அங்கனுார் ஓட்டுச்சாவடியில், விசிக தலைவர் திருமாவளவன் ஓட்டு போட்டார்.பின்னர், அவர் அளித்த பேட்டி: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை, மக்கள் தீர்ப்பாக எழுத உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கூறியது போல் இரண்டு கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல; இரண்டு அணிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல; இரண்டு கருத்தியல்களுக்கு எதிரான யுத்தம். அது தான் இந்த தேர்தல். அந்த யுத்தத்தில் தமிழகம் வெல்லும். மீண்டும் ஸ்டாலின் முன் மாதிரி ஆட்சி அமையும். சமூக நீதி தலைத்தோங்கும். ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு பெண்களை மையப்படுத்தி மேம்படுத்த புதுமைப் பெண், உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட பெண்களை வலிமைப்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.நடிகர் விஜய் திமுக வெறுப்பை மட்டுமே மூலதனமாக்கி, திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பரப்புரையை மட்டுமே மேற்கொண்டார். அவருடைய எதிர்கால திட்டங்கள் குறித்து, கொள்கை கோட்பாடுகள் குறித்து, அவர் ஒரு நாளும் பேசியதில்லை. அவர் வெளிப்படுத்திய திமுக வெறுப்பு உள்நோக்கம் கொண்டது என்பதை மக்கள் உணர்ந்து இருக்கின்றனர். ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்தியாவில் முதல் மாநிலம் என்ற ஒரு எல்லையை தொட்டது. அது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் 11.9% உள்ளூர் உற்பத்தி சதவீதத்தை உயர்த்தக்கூடிய அளவில் பொருளாதாரம் இந்திய அளவில் உயர்ந்து இருந்தது.அப்படிப்பட்ட வளர்ச்சியை, நாம் மேலும் உறுதிப்படுத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தொலைநோக்கு பார்வை அவருக்கு உள்ளது. எனவே, அடுத்த ஆட்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக, அனைத்து துறைகளிலும் தளங்களிலும் கொண்டு செல்ல பாடுபடுவார். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

எழிலரசு
ஏப் 24, 2026 18:58

ஆம் எங்களை தரையில் அமர வைத்தாலும் இறுக பற்றி கொள்வோம் உங்கள் பாதங்களை.


SUBBU,MADURAI
ஏப் 24, 2026 14:29

தேர்தலில் கிடைக்கப் போகும் தோல்வியை கண்டு ஸ்டாலின் துவண்டு விடாமல் இருக்க ஆறுதல் கூறி அவருக்கு உறுதுணையாக நாங்களும் சேர்ந்து ஒப்பாரி வைப்போம்.


வீழ்ச்சி தமிழர், காட்டு மன்னார் குடி
ஏப் 24, 2026 13:14

சட்டசபைக்கு தேர்தலில் போட்டியிட கூட திராணி இல்லை. .கட்ட பஞ்சாயத்து தல


Sun
ஏப் 24, 2026 10:49

எனக்கு ரொம்ப பயமா இருக்குன்னு ஸ்டாலின் என்னக்காவது சொன்னாரா? ஸ்டாலினுக்கு உறு துணையா இருப்போம்னு தன்னிச்சையா நீங்க சொல்லிட?


Venkatesan Srinivasan
ஏப் 24, 2026 14:02

என்றைக்கும் இதுதான் நிலைமை


V Venkatachalam, Chennai-87
ஏப் 24, 2026 10:00

ஒரே ஒரு சின்ன ரொம்ப சின்ன ஆறுதல். இவுரு துச்சாதனன் மாதிரி பஞ்ச் டயலாக் உதயநிதி மற்றும் இன்பாவுக்கு உறு துணையா இருப்போம் ன்னு சொல்லலை. காட்டு மன்னார் கோயில் இவுருக்கு சிம்ம சொப்பனம் ஆனது வேற கதை.


Chandru
ஏப் 24, 2026 09:39

இனிமேல் அந்த முதியவரை நீங்கள் தான் பார்த்து கொள்ளவேண்டும்


Mani . V
ஏப் 24, 2026 05:18

விரலை ஒரு மாதிரியா காட்டுவது மாதிரி இருக்கிறது. ஒருவேளை இரும்புக்கை கோப்பால் சாரை கிண்டல் செய்கிறாரோ?


xyzabc
ஏப் 24, 2026 05:16

நீ சிதம்பரத்தை நாசம் செய்து விட்டாய்


V Venkatachalam, Chennai-87
ஏப் 24, 2026 10:55

திருட்டு தீயமுகவே நாசமா போவும்போது இவர் மட்டும் எம்மாத்திரம்?


Kasimani Baskaran
ஏப் 24, 2026 03:42

திராவிடனுக்கு திராவிடன் ஆதரவு என்பது தெரிந்ததுதானே.


karupanasamy
ஏப் 24, 2026 03:40

வாங்குன துட்டுக்கு ஜாஸ்தியாவே ஊதுறேன்ப்பா.