உங்கள் கட்சியை இயக்குவது யார்? வி.சி., வேட்பாளருக்கு அர்ஜூனன் கேள்வி
: திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அர்ஜூனன், மரக்காணம் ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது பேசியதாவது: திண்டிவனம் தொகுதியில் வி.சி., வேட்பாளர் வன்னி அரசு, தேர்தல் பிரசாரத்தின்போது, திண்டிவனம் தொகுதி மக்களுக்கு தெருவில் நின்று மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் வேலைக்காரனாக செயல்படுவேன் என உருக்கமாக பேசியுள்ளார். கடந்த தேர்தலில் வானுார் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட வி.சி.க., வேட்பாளர் வன்னி அரசு, அந்த தொகுதி மக்களுக்கு செய்த சேவைகள் என்ன என்பதை கூறமுடியுமா, இந்த தேர்தலில் திண்டிவனம் தொகுதிக்கு வந்துள்ளார். அத்துடன், அ.தி.மு.க.,வை பிரதமர் மோடி இயக்குவதாகவும், எங்கள் கட்சிக்கு மோடிதான் தலைவர் என்றும் பேசியுள்ளார். முதலில் உங்கள் கட்சி எம்.எல்.ஏ., கூட்டணி கட்சி தலைவரை சந்தித்து தேர்தலில் சீட் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் அவருக்கு சீட் வழங்கவில்லை எனவும் விமர்சனம் எழுந்துள்ளது. உங்கள் கட்சியை யார் இயக்குகிறார்கள் என்பதை கண்டறிந்து சரி செய்யப் பாருங்கள். இவ்வாறு அர்ஜூனன் எம்.எல்.ஏ., பேசினார். - நமது நிருபர் -
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am