Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்புங்கள் நடிகை கவுதமி பேச்சு

 தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்புங்கள் நடிகை கவுதமி பேச்சு

உளுந்துார்பேட்டை: ''தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது'' என, நடிகை கவுதமி பேசினார்.

உளுந்துார்பேட்டை தொகுதி அ.தி.மு.க.. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து பரிக்கல், கெடிலம் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் மக்கள் விரோத ஆட்சி நடந்துள்ளது. குடும்பத்தை காப்பாற்ற முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் தற்போதைய தி.மு.க.. அரசு.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இரட்டை இலை வெற்றி பெற்றால் உங்களுக்கான பல்வேறு திட்டங்கள் கிடைக்கும். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்து, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்க செய்ய வேண்டும். கடனில் மூழ்கி கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறு கவுதமி பேசினார்.

Advertisement