பீயூஷ் கோயல் தங்கியது ஏன்?
மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் தொகுதி பங்கீடு பேச்சை முடித்து, இரவே டில்லி செல்ல இருந்தார். இதற்கிடையே பீயூஷ் கோயலை, நேற்று காலை த.மா.கா., தலைவர் வாசன் சந்தித்து, ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதேபோல், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனும், தங்கள் கட்சிக்கு தலா மூன்று தொகுதிகள் கேட்டனர். ஆனால், த.மா.கா.,வுக்கு மூன்று, புதிய நீதிக்கட்சி, த.ம.மு.க.,வுக்கு தலா ஒரு தொகுதி வழங்குவதாக, அ.தி.மு.க., தெரிவித்தது. இதை அக்கட்சிகள் ஏற்கவில்லை. இதனால், அவர்களை சமாதானப்படுத்த பீயூஷ் கோயல், சென்னையில் தங்க வேண்டியதாகி விட்டது. அவரை மீண்டும் வாசன் சந்தித்தபோது, சமாதானப்படுத்தி, பழனிசாமியை பார்க்கும்படி அறிவுறுத்தினார். வாசனும், பழனிசாமியை நேற்று காலை சந்தித்து பேசினார். த.மா.கா., புதிய நீதிக்கட்சி, த.ம.மு.க., ஆகிய கட்சிகளையும் சேர்த்து, தே.ஜ., கூட்டணியில், 35 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் சூழலை ஏற்படுத்த, பீயூஷ் கோயல் முயற்சி எடுத்து வருகிறார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am