மணப்பாறைக்கு மவுசு; தி.மு.க.,வில் குழப்பம்
திருச்சி மாவட்டத்தில், மணப்பாறை உள்ளிட்ட ஒன்பது சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் எந்த தொகுதிக்கும் இல்லாத டிமாண்டாக, தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய முக்கிய கட்சிகள் அனைத்தும் மணப்பாறை தொகுதியை கேட்டு வருகின்றன.
கடந்த 2008ல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில், 2011ல் காங்கிரஸ், 2016ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 2021ல் மனிதநேய மக்கள் கட்சி என, தி.மு.க., கூட்டணி கட்சிகளே போட்டியிட்டு வருகின்றன.
அதனால் இந்த முறையாவது தி.மு.க.,வுக்கே ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் தலைமையிடம் முட்டி மோதி வருகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்