Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அ.தி.மு.க., 'மாஜி' விஜயபாஸ்கருக்கு சம்மன்

 அ.தி.மு.க., 'மாஜி' விஜயபாஸ்கருக்கு சம்மன்

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், கரூர் மாவட்டம், குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த, பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணம் வாயிலாக, அபகரித்ததாக, புகார் எழுந்தது.

இது குறித்து, கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், பிரகாஷ் புகார் அளித்தார். அம்மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இவ்வழக்கு தற்போது, கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணையில் உள்ளது. அவர்கள், நில மோசடி தொடர்பாக, விசாரணைக்கு ஆஜாராக வேண்டும் என, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

Advertisement