Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பாஜவை வீழ்த்துவது தான் முதல் கடமை: இந்திய கம்யூ.,

பாஜவை வீழ்த்துவது தான் முதல் கடமை: இந்திய கம்யூ.,

சென்னை: பாஜ தான் எங்கள் குறி. அதனை வீழ்த்துவது தான் முதல் கடமை. இதற்கு முன்னாள் மற்ற காரணங்கள் கடந்து செல்ல முடியும், என இந்திய கம்யூ.,மாநில செயலர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் கூறியதாவது: இந்திய கம்யூ., கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவோடு, போட்டியிடும் இடங்கள் குறித்து பேசினோம்.நாங்கள் கேட்ட தொகுதியை ஒப்புக் கொண்டுள்ளனர். பெற்றுள்ளோம். இன்று நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். போட்டியிடும் இடங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.பேச்சுவார்த்தை இயல்பாக இருந்தது. கேட்ட இடங்களை தான் கொடுத்தனர்.

இந்திய கம்யூ., பொறுத்தவரை அரசியல் தான். எங்கள் முதல் முன்னுரிமை பாஜவை வீழ்த்துவது. தமிழக உரிமை சிதைப்பதுடன், பார்லிமென்ட் ஜனநாயக மாண்புகளையும் விழுமியங்களை கூட்டாட்சி, சட்டத்தின் ஆட்சி முறையை சிதைக்கிறது.பாஜ தான் எங்கள் குறி. அதனை வீழ்த்துவது தான் முதல் கடமை. இதற்கு முன்னாள் மற்ற காரணங்கள் கடந்து செல்ல முடியும்.

பல கட்சிகள் கூட்டணியில் வரும் போது, ஏற்ற இறக்கம் வரும் நேர்மறை எதிர்மறை கருத்துகள் வரும்.திமுகவில் ஜனநாயக இடம் உண்டு. பாஜவில் இடமில்லை. டில்லிக்கு செல்கிறார்கள். சொல்வதை கேட்க வேண்டும் என்கிறார்கள். ஜனநாயக கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. இங்கு ஜனநாயக கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement