தி.மு.க., தேர்தல் அறிக்கை ஹெராயின்: பா.ஜ., விமர்சனம்
திருநெல்வேலி: திருநெல்வேலி தொகுதியை அ.தி.மு.க., கேட்டதால் சாத்துாருக்கு மாறியதாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் அளித்த பேட்டி:-
நான் எங்கு சென்றாலும் திருநெல்வேலியின் பிள்ளை தான். இந்த தேர்தலில், திருநெல்வேலி தொகுதியை அ.தி.மு.க., கேட்டதால் சாத்துாருக்கு மாறியுள்ளேன். வேறு காரணம் இல்லை.
தி.மு.க., தேர்தல் அறிக்கையை வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் என கூறுவர். ஆனால், இந்த முறை அது, 'ஹெராயின்' போன்றதாக உள்ளது.
தி.மு.க., ஆட்சியில், சொத்து வரி, மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
எங்கள் தே.ஜ., கூட்டணி 180க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தே.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் வரும் 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வர்.
பிரதமர் மோடி கோவை வந்த அன்று, அண்ணாமலை ஊரில் இல்லாததால் வர முடியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க., அரசு வழங்காமல், நீதிமன்றம் சென்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்