Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மயிலாப்பூரில் யார் போட்டி? பா.ஜ.,வில், 'குடுமிப்பிடி!'

 மயிலாப்பூரில் யார் போட்டி? பா.ஜ.,வில், 'குடுமிப்பிடி!'

சென்னை: செ ன்னையில், பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட, ஒரே தொகுதியான மயிலாப்பூரில், வெற்றி பெற வேண்டிய கட்டாயம், பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொகுதியில் தமிழிசையை நிறுத்தலாமா அல்லது கே.டி.ராகவனை நிறுத்தலாமா என, கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதால், பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, பா. ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 27 தொகுதிகளை, அ.தி.மு.க., ஒதுக்கியுள்ளது. அதில், சென்னையில் கேட்கப்பட்ட, தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில், மயிலாப்பூர் மட்டுமே கிடைத்தது.

முன்னாள் கவர்னர் தமிழிசை, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பமாக இருந்தார்.

விருகம்பாக்கம் கிடைக்காததை அடுத்து, மயிலாப்பூரில் போட்டியிட தமிழிசை காய் நகர்த்தினார். பா.ஜ., வே ட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கிடைத்த தொகுதிகளில், 10க்கு மேல் வெற்றிபெற வேண்டும் என்பதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாக உள்ளார்.

எ னவே, ஏற்கனவே தயாரித்த வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு பதில், அனைத்து தரப்பினரும் விரும்பும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், வேட்பாளர் பட்டியல் வெளியிடு வது தாமதமாகிறது.

சென்னையில் ஒதுக்கப்பட்ட, ஒரே தொகுதியான மயிலாப்பூரில், கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ., விரும்புகிறது.

இதனால், அந்த தொகுதியில் வேட்பாளராக, தமிழிசையை நிறுத்தலாமா அல்லது செங்கல்பட்டு தொகுதியில் நிறுத்த முடிவு செய்திருந்த பா.ஜ., நிர்வாகி கே.டி.ராகவனை நிறுத்தலாமா என, கட்சி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement