Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 4 தொகுதிகளிலும் உதய சூரியனில் ம.தி.மு.க., போட்டி

 4 தொகுதிகளிலும் உதய சூரியனில் ம.தி.மு.க., போட்டி

சென்னை: தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக, அக்கட்சி பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், 'சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு, 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சீர்காழியில் தனி சின்னத்திலும், மற்ற 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ம.தி.மு.க., போட்டியிடும் என, ஒப்பந்தம் செய்யப்பட்டது.

'தற்போது, சீர்காழி தொகுதியில், ம.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, செந்தில்செல்வன், தனிச் சின்னத்தில் போட்டியிடவில்லை; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்,' என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லுார், சீர்காழி ஆகிய நான்கு தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்திலேயே, அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Advertisement