Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தொகுதிக்கு 50 விருப்ப மனுக்கள் விஜய் பெயரில் வாங்க இலக்கு

 தொகுதிக்கு 50 விருப்ப மனுக்கள் விஜய் பெயரில் வாங்க இலக்கு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகம், த.வெ.க.,வில் வரும் 6ம் தேதி துவங்குகிறது.

இது தொடர்பாக, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:
வரும் சட்டசபை தேர்தலுக்கு, 234 தொகுதிகளிலும், த.வெ.க., சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு கொடுக்கலாம். பனையூர் அலுவலகத்தில், நாளை மறுநாள் முதல் 14ம் தேதி வரை, மனுக்கள் வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
'நான் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு, எல்லாரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும்' என, விஜய் அழுத்தமாக சொல்லி வருகிறார். எனவே, வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்து விட்டதாக தெரிகிறது.

எனினும், அனைத்து கட்சிகளையும் போல், விருப்ப மனு வினியோகத்தை கட்சி தலைமை துவக்குகிறது. ஒவ்வொரு தொகுதியிலும், விஜய் பெயரில், குறைந்தது 50 மனுக்களையாவது வாங்க வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement