Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 சினிமா 'பிளாக் டிக்கெட்' போல விற்று தீர்ந்த த.வெ.க., விருப்ப மனு

 சினிமா 'பிளாக் டிக்கெட்' போல விற்று தீர்ந்த த.வெ.க., விருப்ப மனு

சென்னை: சினிமா 'பிளாக் டிக்கெட்' போல, த.வெ.க., விருப்ப மனு வினியோகம் துவங்கிய ஒன்றரை மணி நேரத்தில் 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு, விருப்ப மனு வினியோகம், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., அலுவலகத்தில் நேற்று பகல் 12:00 மணிக்கு துவங்கியது.

த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய் என்ற பெயரில் முதல் மனுவை, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் பெற்றுக்கொண்டார். வழக்கமாக, அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற கட்சிகளின் விருப்ப மனு, 10,000 முதல் 15,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
ஆனால், த.வெ.க.,வில் விருப்ப மனு கட்டணம் வெறும் 100 ரூபாய் மட்டும்தான். அதை நிரப்பி கொடுக்கும்போது, பொது பிரிவினர் 10,000 ரூபாயும், பட்டியலின பிரிவினர் 5,000 ரூபாயும் கொடுக்க வேண்டும்.

அதுகுறித்து தெரியாமல், த.வெ.க.,வினர் கட்டுக்கட்டாக மனுக்களை வாங்கினர். பெரும்பாலும், விஜய் பெயரிலேயே அவை வாங்கப்பட்டன. அதனால், விருப்ப மனு வினியோகம் துவங்கிய ஒன்றரை மணி நேரத்தில், 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன.
விருப்ப மனுவில், ஜாதி சங்கங்களில் இருந்தால் அதன் விபரம், தாய்மொழி, வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட விபரம், சொத்து விபரம் உள்ளிட்ட, 37 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.,வை மக்கள் புறக்கணித்து விட்டனர்


முதல் நாளில், 4,000 மனுக்கள் தான் போகும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஒன்றரை மணி நேரத்தில், 10,000 விருப் ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. வரும் 14ம் தேதி வரை விருப்ப மனு வினியோகம் உண்டு. நிரப்பிய மனுவை சமர்ப்பிப்பதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.
தி.மு.க., தான் பிரதான எதிரி என்பதை அ.தி.மு.க., மறந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிறது. தி .மு.க.,வின் வெற்றிக்கு உதவும் விதமாக, அ.தி. மு.க., நிர்வாகி கள் பேசுகின்றனர். ஜெயலலிதாவுக்கு பின், அ.தி.மு.க.,வை மக்கள் புறக்கணித்து விட்டனர். - - நிர்மல்குமார் துணை பொதுச்செயலர், த.வெ.க.,


கொந்தளித்த பனையூர்வாசிகள்; பலித்தது செங்கோட்டையன் வாக்கு


த.வெ.க., தலைமை அலுவலகம், சென்னை பனையூரில் உள்ளது. நேற்று விருப்ப மனுவை வாங்க வந்தவர்களில் பலரும், கையில் வைத்து இருந்த விசிலை ஊதிக் கொண்டே இருந்தனர். அதேபோல, த.வெ.க., அலுவலகத்தை சுற்றி, ஆறு தெருக்களில், ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், டென்ஷனான பனையூர்வாசிகள், போலீசிடம் புகார் அளித்ததோடு, த.வெ.க., வினருக்கு எதிராக பேட்டியும் கொடுத்தனர்.
'பொதுமக்கள் காதில் விசிலை ஊதி விடாதீர்கள்; இருக்கும் ஓட்டும் போய் விடும்' என, த.வெ.க., நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் எச்சரித்திருந்தார். அவர் சொன்னது போலவே நேற்றைய நிகழ்வு அமைந்தது.

Advertisement