அறநிலையத்துறை குறித்து வெள்ளை அறிக்கை தேவை
தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட போவதாக கூறிய முதல்வர் விஜய், அனைத்து துறைகளிலும், தி.மு.க., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த தி.மு.க., ஆட்சியில், 3,000 கோவில்களில், அவசர கதியில் குடமுழுக்கு நடந்தது. பல லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டதில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.கோவில் நிலங்கள் மற்றும் வீடுகளை, தனியாருக்கும் அரசு துறைகளுக்கும் முறைகேடாக தாரை வார்க்க, அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்ட வழக்குகள் பதிவாகின. எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறையின், கடந்த கால செயல்பாடு குறித்து, முழுமையான வெள்ளை அறிக்கையை புதிய அரசு, மக்கள் முன்வைக்க வேண்டும். வரும் காலங்களில், அறநிலையத்துறை அதிகாரிகள், நேர்மையாக இறைவனுக்கு பணி செய்யும் நிலை ஏற்பட வேண்டும். - காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am