Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ம.தி.மு.க., 'ஆப்சென்ட்' ஏன்? வைகோ விளக்கம்

 ம.தி.மு.க., 'ஆப்சென்ட்' ஏன்? வைகோ விளக்கம்

சென்னை: சட்டசபையில் நேற்று ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்காதது குறித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

வைகோ கூறுகையில், ''ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செந்தில் செல்வன், ராஜேந்திரன் ஆகியோர், கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றதால், சட்ட சபைக்கு செல்ல முடியவில்லை.

''முதல்வர் விஜய், பெரும்பான்மையை நிரூபித்து விட்டார். தி.மு.க.,வை போல, நாங்களும் ஆறு மாதங்கள் அமைதியாக இருப்போம்,'' என்றார். முன்னதாக, வைகோ தலைமையில் ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், 'தமிழகத்தில் கருவேல மரங்களை அகற்றும் பணி, வரும் ஜூன் 1ம் தேதி கலிங்கப்பட்டியில் தொடங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 5ம் தேதி, வைகோ தலைமையில், வாசுதேவநல்லுாரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்,' என கூறப்பட்டுள்ளது.

Advertisement