Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அறநிலையத்துறை குறித்து வெள்ளை அறிக்கை தேவை

 அறநிலையத்துறை குறித்து வெள்ளை அறிக்கை தேவை

தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட போவதாக கூறிய முதல்வர் விஜய், அனைத்து துறைகளிலும், தி.மு.க., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த தி.மு.க., ஆட்சியில், 3,000 கோவில்களில், அவசர கதியில் குடமுழுக்கு நடந்தது. பல லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டதில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
கோவில் நிலங்கள் மற்றும் வீடுகளை, தனியாருக்கும் அரசு துறைகளுக்கும் முறைகேடாக தாரை வார்க்க, அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்ட வழக்குகள் பதிவாகின. எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறையின், கடந்த கால செயல்பாடு குறித்து, முழுமையான வெள்ளை அறிக்கையை புதிய அரசு, மக்கள் முன்வைக்க வேண்டும். வரும் காலங்களில், அறநிலையத்துறை அதிகாரிகள், நேர்மையாக இறைவனுக்கு பணி செய்யும் நிலை ஏற்பட வேண்டும்.

- காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி

Advertisement