எப்படியாச்சும் பூத் சிலிப் கொடுங்க: அணில் குஞ்சுகள் நச்சரிப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வ ரும் 23ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அன்று விசில் சின்னத்துக்கு ஓட்டு போடும்படி த.வெ.க., விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இதை, 'அனிமேஷன் வீடியோ'வாக த.வெ.க.,வினர் வெளியிட்டு உள்ளனர். இது, 18 வயது பூர்த்தியடையாத 'அணில் குஞ்சு' சிறுவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், விஜய்க்கு ஓட்டு போட என்ன செய்ய வேண்டும் என, தங்கள் நண்பர்களிடமும், கட்சியின் நிர்வாகிகளிடமும் ஆலோசனை கேட்டுள்ளனர். தேர்தல் கமிஷன் வழங்கும், 'பூத் சிலிப்'புகளை பெற வேண்டும் என, அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, தங்கள் பகுதியின் ஓட்டுச்சாவடி அலுவலர்களை நேரிலும், மொபைல் போனிலும் தொடர்பு கொண்டு, பூத் சிலிப் கேட்டு நச்சரித்து வருகின்றனர். 'வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே, பூத் சிலிப் வழங்கப்படும்' என, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் விளக்கம் சொல்லி, அவர்களுக்கு புரிய வைக்க முயன்று வருகின்றனர். 'அப்படியென்றால், வாக்காளர் அட்டையாவது முதலில் கொடுங்கள்' என, சிறுவர்கள் கேட்கின்றனர். 'வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கு, 18 வயது முடிய வேண்டும். அப்போதுதான் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். அதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது' என்று ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நீண்ட விளக்கமே கூறுகின்றனர். கடுப்பாகும் சிறுவர்கள், சர்கார் திரைப்படத்தில் ஓட்டுரிமை தொடர்பாக விஜய் பேசிய, ஒரு விரல் புரட்சி வசனங்களை ஆவேசமாக பேசிவிட்டு, மொபைல் போன் இணைப்பை துண்டித்து விடுகின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am