‛ராஜராஜ சோழனை விட சேகர்பாபு சூப்பர்': கமல்
'ராஜராஜ சோழனை விட கோவில்களுக்கு அதிகம் செய்தவர் அமைச்சர் சேகர்பாபு' என புகழாரம் சூட்டி இருக்கிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.
சென்னையில் பிரசாரத்தில் பேசிய கமல் கூறியதாவது:
தமிழகத்தில், அதிக கோவில்களுக்கு குடமுழுக்கு செய்தவர் சேகர்பாபு. ராஜராஜ சோழனை விட கோவில்களுக்கு இவர் செய்தது அதிகம். நல்ல உள்ளங்கள் நிறைய பேர் உள்ள கட்சி தி.மு.க. அதை, சிறு வயதிலிருந்து பார்க்கிறேன்.
முதல்வர் ஸ்டாலினுடன் உள்ள என் நட்பு, பல தலைமுறை தாண்டியது; அது தற்பெருமை கிடையாது. அவர் தரும் 8,000 ரூபாய் கூப்பன் யார் வீட்டு சொத்து என சிலர் கேட்பர். அதை நான் சொல்கிறேன். நேரு உங்களுக்கு அணை கட்டி விட்டு சென்றார். அது யார் வீட்டு சொத்து, ஐ.ஐ.டி., யார் வீட்டு சொத்து? அதே வீட்டிலிருந்து தான் ஸ்டாலின் எடுத்து தருகிறார். அது உங்களுடையது தான்.
இன்றுவரை பா.ஜ.,வைச் சேர்ந்த யாருக்காவது ஐ.டி., ரெய்டு வந்ததுண்டா? எதிர்தரப்புக்கு ஓட்டு போட்டால், இந்தியாவுக்கான பிரதமர் மற்றும் தமிழகத்திற்கான முதல்வர் டில்லியில் தான் இருப்பார். தமிழகத்திற்கான முதல்வர் தமிழகத்தில், தமிழ் உணர்வுடன் இருக்க வேண்டும். தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவோர் அறிவுள்ளோராக இருந்தால் போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
திமுகவை ஆதரித்த பிறகு வடிவேலு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டார். இந்த முறை திமுக தேர்தலில் தோற்றால், கமல் திரையுலகில் காலி. அவ்வளவு தரித்திரம் பிடிச்ச கட்சி
அப்போ அவன வச்சு ஒரு படம் எடுத்தா போச்சு. திமுக போட்டு தேச்ச வயசான வேற்று சொம்பு

மனம் பேதலித்தவாரா?