Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பெரம்பூர் தொகுதியில் விஜயை வீழ்த்த 1,000 பேர்

 பெரம்பூர் தொகுதியில் விஜயை வீழ்த்த 1,000 பேர்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெரம்பூர் தொகுதியில், த.வெ.க., சார்பில் விஜய்; பா.ம.க., பொருளாளர் திலகபாமா; தி.மு.க., சிட்டிங் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் போட்டியிடுகின்றனர்.

அங்கு, தி.மு.க., தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., கிரிராஜனின் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால், அவரை மாற்றிவிட்டு, இளைஞரணி துணைச் செயலர் ஜோயலிடம், தேர்தல் பணி பொறுப்பை உதயநிதி ஒப்படைத்துள்ளார். அவர், இளைஞர் அணியில் சிறப்பாக பணியாற்றுவோரில், மாவட்ட வாரியாக தலா 10 பேரை தேர்வு செய்துள்ளார். அவர்களுடன் உள்ளூர் நபர்களையும் சேர்த்து 1,000 நிர்வாகிகளை, பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளார்.

தொகுதியில், 18 முதல் 35 வயது கொண்ட வாக்காளர்களை குறிவைத்து, தி.மு.க., இளைஞர் படை ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தேர்தல் பணி செய்கின்றனர்.

Advertisement