/ செய்திகள் / முதல் தேர்தலில் பெருவெற்றி; விஜய்க்கு கமல் பாராட்டு
முதல் தேர்தலில் பெருவெற்றி; விஜய்க்கு கமல் பாராட்டு
நமது நிருபர்
தமிழகத்தில் அபார வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் கமல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள். ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am