/ செய்திகள் / போட்டியிட்ட 27 தொகுதிகளில் 20ல் பா.ஜ.,வுக்கு மூன்றாமிடம்

போட்டியிட்ட 27 தொகுதிகளில் 20ல் பா.ஜ.,வுக்கு மூன்றாமிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், 27 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 20 இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., 27 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், ஊட்டியில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் போஜராஜன் மட்டுமே வெற்றி பெற்றார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட சாத்துார், மத்திய அமைச்சர் முருகன் போட்டியிட்ட அவினாசி மற்றும் ராசிபுரம், தளி, கந்தர்வகோட்டை, வாசுதேவநல்லுார் ஆகிய ஆறு தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ., இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 'சிட்டிங்' எம்.எல்.ஏ., வானதி போட்டியிட்ட கோவை வடக்கு, முன்னாள் கவர்னர் தமிழிசை போட்டியிட்ட மயிலாப்பூர் உள்ளிட்ட, 20 தொகுதிகளில் அக்கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட கிருத்திகா மட்டுமே, 5,000க்கும் குறைவாக அதாவது, 2,430 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். மற்றவர்கள், 5,000க்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

A.Kennedy
மே 08, 2026 12:22

அண்ணாமலை என்ற ஒற்றை மனிதர் இல்லாதது பிஜேபி யை எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறது பாருங்கள்.


SIVA
மே 08, 2026 09:14

அதிமூக பிஜேபி கூட்டணி அமையவில்லை என்றால் தீயமூக இன்னும் முப்பது தொகுதிகளில் வென்று இருக்கும் அது நடந்து இருந்தால் மதசார்பற்ற கூட்டணி என்ற பெயரில் பெரிய அளவில் குதிரை பேரம் நடந்து இன்று தீயமூக ஆட்சியை பிடித்து இருக்கும் ....


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 06, 2026 09:40

உண்மை நிலவரம் என்னவென்றால்....பாஜக போட்டியிட்ட இருபது தொகுதிகளுக்கு மேல் அதிமுகவின் வாக்குகள் கிடைக்க வில்லை மாறாக அவையனைத்தும் தாவெகவிற்கு சென்றது தான் நிதர்சனம்....தவிர அண்ணாமலை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றி அவரை டம்மியாக்கியதால் பாஜகவின் வாக்குகளும் தவெகவிற்கு சென்றுள்ளன....பின்னே 11.50% இருந்த பாஜகவின் வாக்கு வங்கி 3%தத்திற்கு குறைய என்ன காரணம்.....பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அதிமுக மற்றும் பாஜகவின் வாக்குகள் அப்படியே தம் கட்சிகளுக்கு கிடைக்கும் என்று நம்பியது தவெகவின் வரவால் தகர்ந்து போனது என்பது தான் உண்மையிலும் உண்மை....மேலும் பாஜகவின் நிலைப்பாடு திமுகவை அகற்றவேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் காய்களை நகர்த்தியதால் தம் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளவில்லை.....இனி அண்ணாமலைக்கு தலைமை பொறுப்பை கொடுத்தாலும் ஏற்பாரா என்பது சந்தேகமே.....அவரை சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ள வைப்பது திரு மோடிஜியால் மட்டுமே முடியும்.....இறுதியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் எதிர்கட்சியாக ஒரு ஆணியும் பிடுங்காத EPS கடைசி பத்து மாதங்களாக தான் எதிர்கட்சி தலைவராக நடந்து கொண்டார் ஆனால் ஒரு எதிர்கட்சி எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணமாக திகழ்ந்து பாஜக மற்றும் அதன் தலைவர் அண்ணாமலை.,..திமுகவை எதிர்த்து அவர்களின் வண்டவாளங்களை கடைக்கோடி மக்களுக்கும் தெரிவித்து உண்மையை விதைத்தவர் அண்ணாமலை ஆனால் அதிகமாக மக்களை சந்திக்காமல் சினிமா கவர்ச்சியின் காரணமாக வெற்றியை அறுவடை செய்தது தவெக.....இதை யாராலும் மறுக்க முடியாது....!!!


KRISHNA
மே 08, 2026 11:42

நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. மிக சரியாக சொன்னீர்கள். அருமை. ஜெய் ஹிந்த்.


உண்மை கசக்கும்
மே 06, 2026 09:38

அண்ணாமலையை விரட்டியது ஊழல்வாதி எடப்பாடி. அண்ணா திருடர்களுடன் கூட்டணி வைத்த நயினார் அம்போ. உயர்ந்த பதவி தருகிறேன் என்று சொல்லி அண்ணாமலையை ஏமாற்றிய அமித் ஷா மோடி.


Arul Narayanan
மே 06, 2026 08:56

6 இடங்களிலாவது இரண்டாம் இடம் கிடைத்ததே என்று திருப்தி அடைய வேண்டியது தான். அந்த அளவுக்கு பழனிச்சாமி வச்சு செஞ்சுட்டார்.


R.MURALIKRISHNAN
மே 06, 2026 08:47

அண்ணாமலை பதவி பறிக்காமல் இருந்திருந்தால் பல ஆயிரம் இளைஞர் இளைஞிகளின் மனதில் பாஜக வேரூன்றியிருக்கும்


kr
மே 06, 2026 06:23

If bjp had contested alone under Annamalai, probably it would have been TVK -1, BJP-2. Dmk and admk would have been pushed to 3rd and 4th position. Amit Shah seems to have miscalculated the popularity and leadership acceptance of EPS. Now, it is too late. Good thing Is Amit Shah sacrificed TN BJP, to focus on Bengal - they won in Bengal. Now, start hard work in TN. Even in Keralam, BJP won 3 seats. Just 2 seat in TN is a big let down. BJP should stop giving repeat chances to a former governor and union minister. Let others in the party also get chances. Should not matter who looses at the 3rd spot or 4th spot


Modisha
மே 06, 2026 06:47

We have to blame the average Hindu’s mindset in TN and keralam . While Christians and Muslims ly their affinity for anti Hindu parties the Hindus seem happy to clothe themselves in secularism which is only a euphemism for anti Hindu and pro minority slant. The North Indian Hindus are far better.


R Dhasarathan
மே 06, 2026 07:42

மத அரசியல் இங்கு எடுபடுமா என்று தெரியவில்லை ஆனால் சரியான கொள்கையுடன் சரியான புது முகங்களுடன் தனியாக இருந்திருந்தால் ஓரளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கலாம்


Loganathan Balakrishnan
மே 09, 2026 12:36

என்னடா மத அரசியல் இப்ப விஜய் மட்டும் எப்படி வெற்றி பெற்றான் முழுவுதும் அவன் மத ஒட்டு தான் உனக்கு பிஜேபி செஞ்சா தான் மதம் மத்தது எல்லாம் என்ன வெங்காயம்


R Dhasarathan
மே 06, 2026 06:00

மக்களின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாத எந்த அரசியல் கட்சியும் ஜனநாயக நாட்டில் வெற்றி பெற முடியாது. மக்களும் மக்களின் மன ஓட்டமும் தான் ஜனநாயகத்தின் உயிர்....


T.sthivinayagam
மே 06, 2026 08:27

தமிழ் மதத்தினர் விரும்புவது அரசியல் ஆன்மீகத்தை இல்லை பகுத்தறிவு ஆன்மீகத்தையே


vivek
மே 06, 2026 11:18

சிவநாயகம்.. தமிழ் மதத்தினர் வெறுப்பது திருட்டு திராவிடத்தை மட்டுமே


Seekayyes
மே 06, 2026 05:32

எது எப்படியோ, தம்பி அண்ணாமலையை கூட்டணி என்ற சூழ்ச்சியால் பதவியை வலுகட்டாயமாக பறித்ததற்கான பரிசு தமிழகத்தில் பாஜகவிற்கு தரப்பட்டது. எடப்பாடியாரின் ஆணவ போக்கினால் அதிமுகவும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதும் மகிழ்ச்சியே.