அ.தி.மு.க., ஆதரவை பெற பழனிசாமியுடன் த.வெ.க., பேச்சு?
சென்னை: அ.தி.மு.க., ஆதரவுடன் ஆட்சி அமைக்க, பழனிசாமியுடன், தமிழக வெற்றிக் கழகம் பேச்சு நடத்துவதாக அ.தி.மு.க., சார்பில் வென்ற லீமா ரோஸ் தெரிவித்தார்.
அ.தி.மு.க., சார்பில், லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற, லாட்டரி அதிபரின் மனைவி லீமாரோஸ், சென்னையில் நேற்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின், அவர் கூறுகையில், ''ஆட்சி அமைப்பது தொடர்பாக, பழனிசாமியுடன் த.வெ.க., பேச்சு நடத்துகிறது. பேச்சு நல்லபடியாக முடியும் என நினைக்கிறேன். பழனிசாமி அண்ணனின் ஆட்சிதான் அமையும்,'' என்றார்.
இதற்கிடையே, த.வெ.க.,வுடன் பேச்சு எதுவும் நடக்கவில்லை எனவும் த.வெ.க.,வுக்கு அ.தி.மு.க., ஆதரவு அளிக்காது எனவும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணியன் நேற்று தெரிவித்தார். பழனிசாமியை சந்தித்த பின், இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்