போட்டியிட்ட 27 தொகுதிகளில் 20ல் பா.ஜ.,வுக்கு மூன்றாமிடம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், 27 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 20 இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., 27 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், ஊட்டியில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் போஜராஜன் மட்டுமே வெற்றி பெற்றார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட சாத்துார், மத்திய அமைச்சர் முருகன் போட்டியிட்ட அவினாசி மற்றும் ராசிபுரம், தளி, கந்தர்வகோட்டை, வாசுதேவநல்லுார் ஆகிய ஆறு தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ., இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
'சிட்டிங்' எம்.எல்.ஏ., வானதி போட்டியிட்ட கோவை வடக்கு, முன்னாள் கவர்னர் தமிழிசை போட்டியிட்ட மயிலாப்பூர் உள்ளிட்ட, 20 தொகுதிகளில் அக்கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட கிருத்திகா மட்டுமே, 5,000க்கும் குறைவாக அதாவது, 2,430 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். மற்றவர்கள், 5,000க்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்