மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி
கோவை: கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், கோவை வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளருமான வானதி, விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி, அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது: உங்கள் அன்பாலும், பிரார்த்தனையாலும் விரைவாக உடல் நலன் தேறி வருகிறேன். ஓரிரு நாட்களில் உங்களை நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். எனக்காக கோவை வடக்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சகோதர -- சகோதரிகளுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. பிரதமர் மோடி, பா.ஜ.,வின் 'பூத்' கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி உள்ளார். தமிழகத்தின் மீது அளப்பரிய அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியின் வாயிலாக நம் அன்பை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது ஒரு வகையான அனுதாப வாக்கு சேகரிப்பு.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am