தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது தி.மு.க. வழங்கிய கூப்பன், படிவங்கள்
கோவை: கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க.வினர் வினியோகிக்க வைத்திருந்த ரூ.8,000 கூப்பன் மற்றும் இலவச பொருட்களுக்கான படிவத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் பதியப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வருகின்றன. அவற்றை பதிவு செய்து, அருகாமையில் உள்ள பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அக்குழுவினர் விரைந்து சென்று, சம்பந்தப்பட்ட புகார் சரியானதா என ஆய்வு செய்கின்றனர். உறுதி செய்ததும் ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி தியாகராஜன் தலைமையிலான குழுவினருக்கு, எம்.என்.ஜி. வீதி, ம.ந.க. வீதி, வெங்கடராமன் மண்டபம் பகுதியில் கூப்பன் மற்றும் இலவச பொருட்கள் படிவம் கொடுப்பதாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்குழுவினர் விரைந்து சென்று, எம்.என்.ஜி. வீதியில் பிரபாகரன் என்பவரிடம் ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் 66 ஐ கைப்பற்றி, வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
2 இலவச பொருட்கள் படிவம் கைப்பற்றி ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் விதிமுறையை மீறி, வாக்காளர்களை கவரும் வகையில் இலவச பொருட்கள், கூப்பன் வழங்க முயற்சித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பறக்கும் படை அதிகாரி தியாகராஜன் புகார் கொடுத்திருக்கிறார்.
Advertisement
இதெல்லாம் வேலைய்க்காக்கது. ஜுஜுபி.இதெல்லாவர் அவர்கள் செய்யும் திரிமாஸ் வேலையிகள்.
பலே பலான கில்லாடி ஆட்கள். அதற்கெல்லாம் திறமையுள்ளவர் நம் தமிழகத்திலுள்ள திருட்டு கழகம் ஆட்கள். இவரக்ளை விஞ்ச வேறு உலகிலிருந்து தான் வரணும்.
ஒரு வேலை பிஜேபி ஏ இப்படி பிரிண்ட் பண்ணி மாட்டும் மாதிரி செய்து இருந்தால் ஏன் என்றால் டிசைன் அப்படி தான் இருக்கு
தேர்தல் கமிஷன் தேர்தல் கமிஷன்னு சொல்றோமே, அந்த தேர்தல் கமிஷன் ஆளுங்க அத்தனை பேரும் திமுக காரங்கதான்.
காளீஸ்வரி சொன்ன கதை- ஒரு முறை கருணாநிதி சோடா கடையில் வேலை செய்யும் போது , ரெண்டு ரூபாய் திருடி விட்டாராம், அதை மற்றொரு ஆளை மாட்டி விட்டுட்டாராம்
பின்னர் எப்படியோ மாட்டிக் கொண்டாராம் , அப்போது , சரி சரி இந்தாயா உன்னோட ரெண்டு ரூபாய் , அப்டின்னு தூக்கி எறிஞ்சிட்டு , அடுத்த கடையில் வேலைக்கு சேந்துட்டாராம் . . , கதையல்ல நிஜமாம் . . .
சிக்கி...உடனே திமுக வை தடை செய்யுமா பல்லில்லா தேர்தல் கமிஷன் இல்லை ஒன்றுக்கும் பிரோயாஜனம் இல்லா மத்திய அரசு அவர்களை உள்ளே தூக்கி போட்டு உதைக்குமா... போங்கையா போங்க எல்லாம் உலகையே ஆண்ட தமிழனின் தலை எழுத்து திருட்டு திராவிடர்களிடம் பிச்சைகாக கை ஏந்தும் நிலமை...
ஒன்னும் செய்ய முடியாது. எவனாவது கேஸ் போட்டால் இந்த கூப்பன்களை சுண்டல் மடிக்க குடுத்து வழக்கு போட்டவரை உள்ளே வைத்து அபராதம் விதித்து இன்பம் அடையலாம்
இந்த தேர்தலில் ஆளும்கட்சியின் இலவச அறிவிப்புக்களுக்கு எதிராக வாக்களித்தால் தான் இந்த கலாச்சாரம் முடிவிற்கு வரும் ... இலவசம் = விலையில்லா ,குடிகாரன் = மதுப்பிரியன் என எல்லாவற்றிக்கும் சால்ஜாப்பு வார்த்தையை கண்டறிந்து தமிழகத்தை நாசமாக்கியது தான் மிச்சம் ...

Ayya, Amma, Anna, Thangachchi........don't forget to caste your vote
Rs. 8000/- guaranteed!