/ செய்திகள் / சனாதனம் குறித்து சர்ச்சை கருத்து: தி.மு.க., - த.வெ.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்

சனாதனம் குறித்து சர்ச்சை கருத்து: தி.மு.க., - த.வெ.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்

சென்னை: 'தி.மு.க.,வும், த.வெ.க.,வும் மிக குறுகிய அரசியல் வரலாற்றிலேயே, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நிரூபித்துள்ளன' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக - எம்.எல்.ஏ., முஸ்தபாவும் சனாதனம் குறித்து, சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

'சனாதனத்தை ஒழிப்பதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்' என்று த.வெ.க.,வை சார்ந்த எம்.எல்.ஏ., ஒருவர் பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது. மக்களின் மத நம்பிக்கை குறித்து, கண்டனத்திற்கு உரிய வகையில் பேசுவது தான், த.வெ.க., முன்வைக்கும் மாற்றமா. தங்கள் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர், ஹிந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவிக்கும் போது, அதை கண்டுகொள்ளாமல் இருப்பது தான், 'அனைவருக்குமான அரசு' என்று விளம்பரப்படுத்தும் ஒரு அரசின் லட்சணமா இது. மக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தி பேசியவர் மீது, கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது இருக்கும் வகையில், நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:

சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய சில நாட்களிலேயே, த.வெ.க., - எம்.எல்.ஏ., முஸ்தபா, அந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது, மிகவும் வருத்தம் அளிப்பதுடன், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் நித்திய தர்மத்தின் மீது, அவர்கள் மனதில் எவ்வளவு வெறுப்பை வைத்திருக்கின்றனர் என்பதையும் காட்டுகிறது. தி.மு.க.,வும், த.வெ.க.,வும் தங்களின் மிக குறுகிய அரசியல் வரலாற்றிலேயே, மக்கள் முன்னிலையில், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நிரூபித்துள்ளன. சனாதன ஹிந்து தர்மத்தின் மீது தொடர்ந்து மேற்கொண்ட தாக்குதல், தங்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளன என்பதை, தி.மு.க., மறந்து விட்டது. அதையே, த.வெ.க.,வும் விரைவில் உணரும்.

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:

ஒரு இஸ்லாமியர், குறிப்பாக ஒரு மக்கள் பிரதிநிதி, ஹிந்து மதம் குறித்து அவதுாறு பேசுவதும், ஒழிக்க போகிறோம் என்று கூறுவதும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல். சனாதன தர்மம் என்ற வாழ்க்கை முறையை விமர்சிக்கும் முஸ்தபா, இஸ்லாமிய மார்க்கத்தை விமர்சிப்பாரா. உதயநிதி சட்டபையில் பேசியதையும், முஸ்தபா பேசியதையும் முதல்வர் விஜய் கண்டிக்கவில்லை. பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறையை விமர்சிப்பவர்களை கண்டிக்காது இருப்பது, முதல்வர் பதவிக்கு அழகல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 90 )

S.V.Srinivasan
மே 20, 2026 08:58

பி ஜே பி என்னதான் கதறினாலும் உதயநிதியை திருத்த முடியாது. திருத்த முடியாத ஜென்மம். ஆனா இப்போ எம் எல் ஏ வா இருக்கிற இந்த பதவிக்காகவாவது சட்டசபையில் பொறுப்போடு பேசணும்னு தோன மாட்டேங்குதே. யாரவது சொல்லி கொடுங்கப்பா.


mainapproach
மே 16, 2026 09:25

மத நம்பிக்கை என்பது மனதில் இருக்க வேண்டும். மேலும் அவர் அவர் வீட்டிற்குள் இருக்க வேண்டும். எந்த கடவுளும் அடுத்தவர்களை துன்புறுத்த கூறவில்லை. இதை எல்லோரும் புரிந்துகொள்ளவேனும்.


Kuppan
மே 16, 2026 07:17

ஓட்டு போட்டு மக்களின் வாழ்க்கை பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுங்கடானா தர்மத்தை அழிக்க தான் வந்தேன்னா 80சதவீதம் இந்து மக்களின் ஓட்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது எல்லோருக்குமான அரசு என்று கூறிவிட்டு, பதவி ஏற்ற போது என்ன சொல்லி பதவி என்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்


Kuppan
மே 16, 2026 07:07

முதலில் ஒழிக்க படவேண்டியது வறுமை, லஞ்சம், ஊழல் மற்றும் பிச்சை


bharathi
மே 15, 2026 20:16

Time to retaliate by a big possession. Hindus must unite to eradicate such fools


ரஹ்மத் கான், கீழக்கரை
மே 15, 2026 17:16

இந்த குல்லா போட்ட வந்தேறிகளை கை கால்களை சங்கிலி யால் பிணைத்து அமெரிக்கா செய்வதைப் போல அவர்களின் சொந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இல்லையேல் இங்கும் ஒரு உய்குர் அமைக்க வேண்டும்


Suppan
மே 15, 2026 17:00

ஜனாப் முஸ்தபா உங்கள் மதத்தில் உள்ள திவீரவாதம், ஜிஹாதி வேலை, பிரிவு வேறுபாடுகள் போன்ற தீமைகளை ஒழித்துவிட்டு வாருங்கள். பிறகு பேசலாம்.


Narasimhan
மே 15, 2026 16:10

தமிழக இந்துக்கள் சூடு சுரணையற்ற அறிவிலிகள் என்று அறிந்துகொண்டு திமுக காரனுக சனாதனத்தை கேலி செய்து சாக்கடையில் தூக்கி எறியப்பட்டார்கள். கட்சி ஆரம்பித்ததுமுதல் தவேக திமுகவை காப்பி அடித்தே அறிக்கை வெளியிடுகின்றனர். இதை மதசார்பற்ற முஸ்தபா போன்றோர் திரும்ப திரும்ப கூவுவதன் மூலம் அவர்களும் தூக்கி எறியப்படுவார்கள்.


Muralidharan raghavan
மே 15, 2026 15:55

சனாதன தர்மத்தை ஒழிக்க முஸ்தபா யார்? உனது மதத்தினரால் உலகம் முழுவதும் அமைதியின்மை நிலவுகிறது. முதலில் அதனை சரிசெய்ய முயற்சி செய்


PATTALI
மே 15, 2026 15:49

உதயநிதி பேசுவதை நன்றாக கவனித்தால் அவருக்கு இன்னும் சனாதனம் என்றால் என்ன என்று சரியாக புரிந்துகொள்ளவில்லை என தோன்றுகிறது. திராவிடர்கள் அவர்களும் குழம்புவார்கள், தெளிவானவர்களையும் குழப்பிவிடுவார்கள். பிறகு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பார்கள். அவர் பேசுவதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலே மிக நல்லது.